Wednesday, August 6, 2008

இது என்ன கொடுமை

http://thatstamil.oneindia.in/news/business/2008/08/04/business-sbi-earns-a-cool-rs-60-crores.html
விண்ணப்பம் விற்றே ரூ.60 கோடி சம்பாதித்த ஸ்டேட் வங்கி!
மும்பை: வங்கிகளின் வங்கி என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெகு எளிதாக ரூ.60 கோடியைச் சம்பாதித்துள்ளது. எப்படித் தெரியுமா?

வேலைக்கான விண்ணப்பங்களை விற்பனை செய்ததன் மூலம்!!

சமீபத்தில் இந்த வங்கியின் பல்வேறு பிரிவுகளில் 20000 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகின. இவற்றில் பெரும்பாலனவை எழுத்தர் நிலை வேலைகள்தான்.

அறிவிப்பு வெளியான அடுத்த சில தினங்களில் விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. மொத்தம் 2.4 மில்லியன் (24 லட்சம்) விண்ணப்பங்கள் குவிந்தன. ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.250 –ஐ கட்டணமாக வசூலித்தது இந்த வங்கி.

இந்த வகையில் மட்டும் ரூ.60 கோடியை சம்பாதித்துள்ளது ஸ்டேட் வங்கி (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழ்கப்பட்ட சலுகைத் தொகை போக).

இவர்களாவது பரவாயில்லை... இன்னும் இரு அரசுத்துறை வங்கிகளான தேனா வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.500 வீதம் கட்டணம் வசூலித்து கிளர்க் வேலைக்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளன (பிஎஸ்ஆர்பி எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஒழிக்கப்பட்டதன் விளைவு இது).

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொருளாதாரத்தின் இன்னொரு முகத்தை நாம் பார்க்கவே தயாராக இல்லை என்பதை உணர்த்த ஒரு சாம்பிள் இது!

0 comments: